ஓமன் நாட்டில் நடந்த வெவ்வேறு சாலை
விபத்துகளில் 2 இந்திய வாலிபர்கள் பலியானார்கள்.
நிஸ்வா நகரில், கார் உதிரி பாகங்கள் விற்கும் கடை ஒன்றில் 2 வாரங்களுக்கு
முன்பு பணியில் சேர்ந்தவர் முகமது
நவுபால் (வயது 22). கேரளாவைச் சேர்ந்த அவர், சாலையை கடக்க முயன்றபோது, ஒரு வாகனம் மோதியதில்,
சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
மஸ்கட்டில் பணியாற்றி வரும் அவருடைய சகோதரர்,
அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து
வருகிறார்.
சலாலா நகரில், மராட்டிய மாநிலத்தைச்
சேர்ந்த அப்பாஸ் (35) என்ற வாலிபர், குப்பை
அள்ளும் வாகனத்தில் சென்றார்.
எதிர்பாராத விதமாக அவர் சென்ற அந்த வாகனமும், எதிரில் வந்த மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், அப்பாஸ் பலியானார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக