திங்கள், 12 அக்டோபர், 2015

சவுதியில் கைதுண்டிக்கப்பட்ட தமிழகப்பெண்ணிடம் ’சிறப்பு விசாரணை குழு ” விசாரணை.

சவூதி  அரேபியாவிற்கு  வீட்டு வேலைக்காக வந்து வலது கை துண்டிக்கப்பட்டு  ரியாத்திலுள்ள  'கிங்டம்'   மருத்துவமனையில்  தீவிர   சிகிச்சை பெற்று  வருகிறார்  தமிழகத்தை  சேர்ந்த  பெண்.


அவருடைய  விவகாரம் சவூதி அரசின் உயர்   அதிகாரிகளுடைய   கவனத்திற்கு கொண்டு  செல்லப்பட்டு  சிறப்பு  விசாரணை  குழு (Special Investigation Team) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

பாதிக்கப்பட்ட பெண்,  அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட  பெண்ணின்  முதலாளியிடமும்  விசாரணை  நடத்தியுள்ளார்கள்

கஸ்தூரி முனிரத்தினம் அவர்கள் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்

"சம்பவம் நடந்த அன்று நான் தொழுகையில் இருந்த போது கஸ்தூரி தங்கியிருந்த அறையின் உட்கதவை பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக துணியை கட்டி 3வது  மாடியிலிருந்து  இறங்கியுள்ளார்.

அப்போது தரைதளத்தில் இருந்த இரண்டு மின்சார பெட்டிகளுக்கிடையில் (Electricity Boxes) விழுந்ததில் வலது கை துண்டிக்கப்பட்டதாகவும்சம்பவத்தை நேரில் பார்த்த அந்த தெருவை சேர்ந்த ஒருவர் வீட்டின் காவலாளியிடம் தெரிவித்துள்ளார்.

 உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்". இன்றும் கூட சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரிகள் கஸ்தூரி முனிரத்தினம்  அவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.

  இந்த விசயத்தில் இந்திய தூதரக அதிகாரிகளும் தனி கவனம் எடுத்து கஸ்தூரி அவர்களுக்கு தேவையான சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

  சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் நலனில் அக்கறை எடுத்து செயல்படும் 'இந்தியன் சோசியல் போரம்' மனிதாபிமான உதவிகளை  கஸ்தூரி முனிரத்தினம்  அவர்களுக்கு  செய்து  வருகிறது.

தகவல்.....'இந்தியன்  சோசியல்  போரம்'  ரியாத்-   தமிழ்நாடு   மாநிலக்கமிட்டி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...