புதன், 14 அக்டோபர், 2015

10 வயது இந்திய சிறுவன் ஜாவா தேர்வில் சாதனை!


சாப்ட்வேர்              டெவலப்பர்   எழுதும்   ஜாவா தேர்வை, ஆமதாபாத்தில்  5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் ரூனில் ஷா, 100 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று  சாதனை  படைத்துள்ளான்.




அமெரிக்காவை  சேர்ந்த  ஆரக்கிள்  பல்கலைக்கழகம்  ஆன்லைனில்    நடத்தும் 'ஜாவா ஸ்டான்டர்ட் எடிஷன் 6 புரோகிராமர்' தேர்வை கடந்த செப்டம்பர் 22ம் தேதி எழுதிய ரூனில் ஷா, தனது முதல் முயற்சியிலேயே முழுமதிப்பெண்களையும்  பெற்று தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். இதற்கு இவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே. இத்தேர்வுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள  மொத்த நேரம் 2  மணி 56 நிமிடங்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

இச்சான்றிதழ் பெற்ற இளம்வயது இந்தியர் என்ற சாதனையும், குறைந்த வயதில் 100 மதிப்பெண்கள் பெற்றவர் என்ற சாதனையையும், தன்வசம் வைத்துள்ள இச்சிறுவனை 'ஜாவா சாம்பியன்' என அனைவரும் அழைக்கிறார்கள்

1ம் வகுப்பு படிக்கும் போது கம்யூட்டர் மீதிருந்த ஆர்வத்தால் அனிமேஷன், கோரல்டிரா, சி, சி++ ஆகியவற்றை கற்றறிந்த ரூனில் ஷாவின்     கவனம்   ஜாவா பக்கம் திரும்பியது. ஜாவா கற்பதற்காக, காலை 11.30 மணிக்கு தான் படிக்கும் கம்யூட்டர் சென்டருக்கு செல்லும் இவர் மாலை 6 மணி வரை ஜாவாவில் மூழ்கி விடுவாராம்.


தனது இச்சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரூனில் ஷா, வரும் காலத்தில் ரோபர்டிக்ஸ், அட்வான்ஸ்டு ஜாவா, ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு பற்றி கற்க அதிக விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளார்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...