முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டான்ட் அருகில் (16/10/2015) நேற்று இரவு சுமார் 12 மணிக்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குளிரில் நடுங்கியபடி கிடந்துள்ளார்.
அவரைபற்றி விசாரிக்கையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அவருக்கு மஞ்சள்காமாலை நோய் முற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் குளிரில் நடுங்கியபடி கிடந்துள்ளார். இந்த தகவலை பைத்துல் மால் நிர்வாகிகளுக்கு அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கிடைத்த தகவலை அடுத்து விரைந்து சென்ற பைத்துல்மால் நிர்வாகிகள் அவரை மீட்டு பைத்துல்மால் ஆம்புலன்ஸில் ஏற்றி வேளாங்கன்னி அடுத்த இருக்கும் பரவையில் இயங்கிவரும் மஞ்சள்காமாலை நோய்க்கான மருத்துவமனையில் இரவு சுமார் 2 மணிக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த நல்லிரவில் தகவல் கிடைத்த உடன் தூக்கத்தை இழந்து இந்த நல்ல காரியத்தை செய்த பைத்துல்மால் நிர்வாகிகளை அங்குள்ளவர்கள் மனதார வாழ்த்தினார்கள்.
தொடரட்டும் அவர்களின் மனிதாபிமான சேவை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக