திருவாரூர் மாவட்டத்தில் கோயில் திருவிழா உட்பட
பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை திருடு போனது.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி
ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார்
குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருவாரூர் அருகேயுள்ள அடியக்கமங்கலம் பூக்காளியம்மன் கோவில் தெரு ரவிச்சந்திரன்
மனைவி ஆதிலெட்சுமி (40) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில்
திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்
தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கோயில் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் நகை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அவர் திருவாரூர் மாவட்டத்தில் 13 இடங்களில் நகை திருடியது தெரிய
வந்தது. மேலும் அவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள அகலங்கன் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அங்கு நகை திருடி
விற்ற பணத்தில் பங்களா ஒன்றை விலைக்கு
வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை
கைது செய்த போலீசார் அவரிடமிருந்து
55 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர்
திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில்
ஈடுப்பட்டு வந்ததால் எஸ்.பி ஜெயச்சந்திரன்
பரிந்துரையின் பேரில் ஆதிலெட்சுமியை குண்டர்
தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய
கலெக்டர் மதிவாணன் நேற்று உத்தரவிட்டார்.
இந்த
உத்தரவு நகல் திருச்சி மத்திய
சிறையில் உள்ள ஆதிலெட்சுமியிடம் போலீசார் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக