கோட்டாறு இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் நாம் உபயோகித்த ஆடைகளை சேகரித்து அவற்றை
நல்ல ஆடை அணிய வசதியில்லாத மக்களை தேடிச் சென்று அவர்களுக்கு
வழங்குகிறார்கள்.
ஜாதிமத பேதமில்லாமல் ஏழை அனாதைக் குழந்தைகள்
உட்பட ஆண்கள்
பெண்கள் அனைவருக்குமே இந்த
ஆடைகளை கொண்டு சேர்க்கிறார்கள்.
தேனி,
ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பண்டல்
பண்டலாக அனுப்பி வைக்கிறார்கள். மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு இவர்களே
நேரடியாகக் கொண்டு கொடுக்கிறார்கள்.
பொதுவாக
...வசதி இல்லாத சிலர் வீடுகளுக்கு
அடிக்கடி வந்து சட்டைகளையும் சேலைகளையும் கேட்டு கட்டாயமாக வாங்கிச் செல்வார்கள். இரக்கமுள்ள தாய்மார்கள் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பார்கள்.
அவர்கள் வாங்கிச் செல்லும் ஆடைகள் பெரும்பாலும் அதிகம்
உபயோகிக்காத ஆடைகளாகவே இருக்கும். ஒருநாளிலேயே இவர்கள் ஏராளமான துணிமணிகளை சேகரித்து விடுவார்கள்.
இதில் முஸ்லிம் பெண்களைப்போல முக்காடு போட்டு வரும் பெண்களும்
அடங்குவர். இவர்கள் வீடுகளுக்கு சென்று வாங்ககூடிய சேலைகள், சர்ட்டுகள், குழந்தைகளுக்கான ஆடைகள் எல்லாமே
விலை மதிப்புள்ளவை ஆகும்.
இதுபோன்ற துணிமணிகளை விலைக்கு வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. 1000 ரூபாய்
மதிப்புள்ள சட்டையை இவர்கள் 30 ரூபாய்க்கு வாங்குவார்கள். நல்ல சேலைகளுக்கும் கூடிப்போனால் 50 ரூபாய் கொடுப்பார்கள்.
இலவசமாக
வாங்கிச் செல்பவர்கள் வரும் வரை லாபம் என்ற நோக்கில் கிடைத்த துணிகளை 300 முதல் 500 ரூபாய் வரை விற்று விடுவார்கள். கிடைத்த பணத்தை சிலர் டாஸ்மாக்கில் திருப்தியாக
தண்ணியடிப்பார்கள். ஒரு வாரம் இவர்கள் இது போல ஜாலியாக இருப்பார்கள். மறுவாரம் வேறு ஏரியாவுக்கு சென்று விடுவார்கள்.
பழய துணிகளை விலைக்கு
வாங்கியவர்கள் அதை நவீன மெஷின்களில்
வாஷ் பண்ணி ரீசேல் செய்வார்கள்.
30 ரூபாய்க்கு வாங்கிய பாரின் சர்ட்
100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் என்று டெம்போவில் போட்டு விற்பார்கள்.
இதுதான் நடக்கும் நடப்பு.
இப்பொது
கோட்டாறு இளைஞர்கள் தேவையுள்ளவர்களை தேடிப் பிடித்து கொடுப்பது வரவேற்புக்குரியதுதான். என்றாலும் தேவைக்கு அதிகமாக மக்கள் பழய துணிகளை கொண்டுபோய் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதை உரிய முறையில் கையாள
வேண்டும். கவனமாகவும் இருக்க வேண்டும். நல்லதொரு
சேவையை சொந்தப் பணம் கொண்டு செலவழித்து
செய்து வரும் இந்த இளைஞர்களை நாமும் வாழ்த்துவோம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக