ஒரு படம் பேஸ்புக்கில் மில்லியன்
பேரின் கவனத்தில் பட்டையைக் கிளப்பி இருக்கு
அழகான
பெண்கள் ஆனந்தமாக இருக்கும் இந்தப் படத்தில் இருக்கும்
பெண்கள் எல்லாருமே ஒரு கால், சிலர்
இரண்டு காலையும்
அமரிக்க இராணுவத்தில் பணியாற்றியபோது
யுத்தமுனையில் இழந்தவர்கள். prosthetic devices
என்ற செயற்கைக் கால் போட்டு உள்ளார்கள்.
தங்களைப்
போலவே உலகத்தில் சண்டைகளின் இடையில் அகப்பட்டு அவயங்களை
இழந்து prosthetic devices
வாங்கிப் போட மருத்துவ, பொருளாதார
வசதியில்லாத சாதாரண மனிதர்களுக்கு நிதி
சேகரிக்கும் விழிப்புணர்வு திட்டத்தில் இந்த படத்துக்கு மாடல்
போல போஸ் கொடுத்தது அவர்கள்
நினைத்த மாதிரியே நிறைய விழிப்புணர்வு கிடைத்துள்ளது.
தங்களின் இழப்பின் துன்பத்தை ஒவ்வொருநாளும் ஏதோ ஒரு வகையில்
நேர் மறையாக்கி, சவால் நிறைந்த வாழ்கையை
வெற்றிகரமாக எதிர்கொள்ளும் இந்தப் பெண்கள், முன்னுதாரணமாக
முன்னேற்றத்தை செயற்கைக் கால்களில் தாங்கிக்கொண்டு, வெற்றிப் பாதையை தன் நம்பிக்கையின்
கைகளில் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கும் உதவ முன் வந்துள்ளார்கள் .
" தெரிந்த
இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள்
யாதொன்றும் இல் "
இப்படி பொய்யாமொழிக் குறள்
462:.சொல்கிறது.
அதன் எளிமையான மொழி விளக்கம்
" தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து,
ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து,
தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால்
ஆகாதது ஒன்றுமில்லை. " என்று சொல்கிறார்கள்.
.
இந்தக்
குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு " With chosen friends
deliberate; next use the private thought; Then act. By those who thus proceed
all works with ease are wrought.There is nothing too difficult to (be attained
by) " என்று மிக மிக அழகாக
வருகிறது.
சரண் குமார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக