திங்கள், 12 அக்டோபர், 2015

சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் பறவை மோதியது.


  
 கோவை வந்த ஷார்ஜா விமானம்  ஒன்றில் பறவை மோதியதால்  விமானம்  தடுமாறியதுஆனால்  விமானியின் சாமர்த்தியத்தால்  100 பயணிகள் உயிர் தப்பினர்.


 ஷார்ஜாவில்  இருந்து  கோவைக்கு காலை 4 மணிக்கு விமானிகள் பயணி வருவது வழக்கம். இந்த விமானம் மீண்டும் 5 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். வழக்கம் போல்  இன்று  காலையும்  ஷார்ஜா விமானம் 100 பயணிகளுடன் கோவை  வந்தது.


கோவை  விமான நிலையத்தில்  தரையிறங்குவதற்கு  முன்   விமானத்தின் மீது பறவை மோதி உள்ளது. இதனால் நிலைகுலைந்து,   தடுமாறிய விமானத்தை விமானி  சாதுர்யமாக   தரையிறக்கினார்.  இதனால் 100 பயணிகள் உயிர்தப்பினர்.

இந்த விமானம் 5 மணிக்கு ஷார்ஜா புறப்பட்டு செல்லவில்லை. பயணிகள் கோவையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு ஷார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா நிறுவனத்தைச் சேர்ந்த 2 தொழில் நுட்ப  நிபுணர்கள் வர உள்ளனர்

அவர்கள் விமானத்தை பரிசோதித்த பிறகே மீண்டும் விமானம் ஷார்ஜா புறப்பட்டு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...