திங்கள், 16 நவம்பர், 2015

SDPI கட்சியின் உதவியால் ஏமனில் பலியான பட்டுக்கோட்டை வாலிபர் உடல் சொந்த ஊருக்கு வந்தது.

SDPI  கட்சியின் உதவியால் ஏமன் நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  இறந்த பட்டுக் கோட்டை வாலிபர் உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.  


37 நாட்கள் போராடி துபாயிலிருந்த உடலை   SDPI கட்சியினர்   பெற்று அவரின்  குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.

 இறப்பு சான்றிதழில் மாரடைப்பு என இருந்ததால் உண்மையான இறப்பு சான்றிதழை   வழங்ககோரி   உறவினர்கள்   சாலை   மறயலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவரிமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜேசுமேரி. 

இவர்களது மகன் அந்தோணி ராஜ் (24), மகள் ரூபினா (30). ரூபினாவுக்கு திருமணமாகி விட்டது. அந்தோணிராஜ் 2013ம் ஆண்டு துபாயில் உள்ள ஒரு கம்பெனிக்கு ஆசாரி வேலைக்கு சென்றார். 

இந்நிலையில் துபாய் கம்பெனி பணிநிமித்தம் காரணமாக தென்னாப் பிரிக்காவில் உள்ள ஏமன் நாட்டில் ராணுவ தளத்தில் கூடாரம் அமைக்கும் பணிக்கு கடந்த செப்டம்பர் மாதம் அந்தோணி ராஜ் உள்ளிட்ட 10 பேரை அனுப்பியது.  அப்போது  ஏமன்  ராணுவமுகாம்  மீது தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியில் இருந்த அந்தோணிராஜ் பலியானார்.

இந் நிலையில்  ஒன்றரை  மாதத்திற்கு பிறகு அந்தோணிராஜின் உடல் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தது. பின்னர் அங்கிருந்து நேற்று காலை அவரது சொந்த ஊரான வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி கிராமத்திற்கு கொண்டு  வரப்பட்டது. 

அப்போது அந்தோணிராஜின் இறப்பு சான்றிதழை பார்த்த போது அதில் மாரடைப்பால்  உயிரிழந்ததாக இருந்தது. இதை கண்டித்தும், உண்மை இறப்பு சான்றிதழ் வழங்கக் கோரியும், பாதிக்கப்பட்ட அந்தோணிராஜின் குடும்பத்திற்கு  உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உறவினர்கள், கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் அந்தோணிராஜின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸை  நிறுத்தி பட்டுக் கோட்டை- தஞ்சாவூர் மெயின் ரோட்டில் உள்ள வீரக்குறிச்சியில்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டுக் கோட்டை டிஎஸ்பி பிச்சை, தனி தாசில்தார் பாஸ்கரன், மண்டல துணை தாசில்தார் தரணிகா  ஆகியோர்  சமாதான  பேச்சு  வார்த்தை  நடத்தினர். 

அப்போது கலெக்டர், எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்று கோரிக்கை  வைத்து  சாலை  மறியலை  கைவிட  மறுத்தனர். தொடர்ந்து நடந்த சமாதான பேச்சு வார்த்தையில் பாதிக்கப் பட்ட அந்தோணிராஜின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை   அதிகாரிகள்   உறுதியளித்தனர். 

அதன் பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து அந்தோணி ராஜின் உடல் அடக்கம் செய்யப் பட்டது. இந்த சாலை மறியலால் இரண்டரை  மணி நேரம்   போக்குவரத்து  பாதிக்கப் பட்டது.

கடந்த  37 நாட்களாக SDPI கட்சி பல தரப்பில் போராடி உடலை பெற்று கொடுத்த   SDPI கட்சிக்கு  அவரின்  உறவினர்கள்  நன்றியினை  தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...