என் மதிப்பிற்குரிய நண்பர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களின் துணைவியார் மரியம் ஜமீலா (72) அவர்களின் மறைவு குறித்து இன்றுதான் அறிந்தேன்.
கொடிக்கால் செல்லப்பா அவர்கள் மரியம் அவர்களை மணந்த போது மரியம் அவர்கள் ஒரு கிறிஸ்தவர். செல்லப்பா.... ஷேக் அப்துல்லா ஆனபோது மரியம் அவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.
இவர்களுக்கு ஒரு மகன். மருமகள் மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு மலையாள முஸ்லிம். கொடிக்காலவர்கள் குமரிப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். நீண்ட காலம் சி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலராக இருந்தவர்.
இஸ்லாமியருக்கு எதிரான ஒரு வெறுப்பு அரசியல் இங்கு தலை எடுத்தபோது இன்று வரை முஸ்லிம் சமூகத்தின் நியாயங்களுக்காக நிற்பவர்.
மரியம் ஜமீலா அவர்களை இரண்டாண்டுகளுக்கு முன் ஒரே ஒரு முறை கொடிக்கால வர்களைச் சந்திக்கச் சென்றபோது நாகர்கோவிலில் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளேன்.
அவர் இஸ்லாத்திற்கு வருமுன் நாத்திகராக இருந்தவர் என்பதையும் கொடிக்கால வர்கள் இன்று சொல்லும் போதுதான் அறிந்தேன்.
சென்ற வாரம் நாகர்கோவிலில் நடந்த இறுதிச் சடங்கில் கட்சி வேறுபாடுகல் இன்றி இடதுசாரிகள், திராவிட இயக்கத்தவர், காங்கிரஸ்காரர்கள், பெரிய அளவில் ஜாமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
முழுமையாக இஸ்லாமிய நெறிமுறைகளின்படி இறுதிச் சடங்குகள் நிகழ்ந்ததை நெகிழ்ச்சியோடு கொடிக்கால் அவர்கல் பகிர்ந்து கொண்டார்கள்.
மரியம் ஜமீலா அவர்கலுக்கு அஞ்சலிகள்..
...மார்க்ஸ் அந்தோனிசாமி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக