சனி, 21 நவம்பர், 2015

பாரிஸ் தாக்குதல்...இஸ்லாமிய பெயர்களில் நடமாடிய இஸ்லாமிய விரோதிகள் என்பது அம்பலம்.

பாரிஸ் தாக்குதலில் தொடர்ப்புடையவர்கள் இஸ்லாமிய பெயர்களில் நடமாடிய   இஸ்லாமிய விரோதிகள்  என்பது  அம்பலமாகி உள்ளது.

பிரான்ஸின்  பாரிஸ்  நகரில்  நடை பெற்ற  தாக்குதலுக்கு சொந்தகாரர்கள்   அப்து ஸலாம் சகோதரர்கள்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது.



அப்துஸலாம் என்று அரபி மொழியில் பெயர் சூட்டபட்டதை பார்த்ததும் அவர்களை உண்மை முஸ்லிம் என்று எண்ணிவிடாதீர்கள். அவர்கள் பற்றி தகவல்களை  ஒரு  ஆங்கில  ஊடகம்  தோலுரித்துிருக்கிறது.

அந்த தகவல்கள் அவர்களின் பெயர்கள் தான் முஸ்லிம் பெயர்களாக உள்ளனவே தவிர அவர்களது செயல் பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு  இல்லை  என்பதை  உறுதி  செய்கிறது

உண்மை  முஸ்லிம்  மதுவில் இருந்து  வெகுதொலைவு  விலகி  நிற்பான். பாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய அப்துஸலாம் சகோதரர்கள் மது வியாபாரிகளாகவும் , மது பார்களை நடத்தக்கூடியவர்களாகவும் இருந்துள்ளனர்.

பெல்ஜயத்தில்  அவர்களுக்கு சொந்தமான மதுபார்கள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருவரும் முழு நேரமும் போதையிலேயே அலைபவர்களாம்.

இவர்கள் அளவுக்கு அதிகமாக போதை பொருட்களை விற்று வந்ததால் பெல்ஜியம்  காவல்துறையால்  நடவடிக்கை்கு  உட்படுத்த பட்டவர்கள்.

இவர்களுக்கும்  தொழுகைக்கும்  எந்த  தொடர்பும்  இருந்தது இல்லையாம்.  வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகளில் கூட இவர்கள் கலந்து கொண்டது  இல்லையாம்.

இப்படி இஸ்லாத்தோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களால் நடத்தபட்டதுதான்  பாரிஸ்  தாக்குதல்  என்பது அம்பலமாகியுள்ளது.

இஸ்லாத்தோடு தொடர்புடையவன் ஒருபோதும் வன்முறைகளில் இறங்க மாட்டான் என்ற உண்மை மீண்டும்  ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்யதலிஃபைஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...