அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல் ரௌடிகளால் சூறையாடப்பட்டது. அங்குள்ள திருக்குரானின் பக்கங்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன.
இதை அறிந்த ஜாக் எனும் அருகில் வசிக்கும் சிறுவன், தான் ஐபாட் (IPad) வாங்குவதற்காக சேர்த்து வைத்து இருந்த 20 டாலர் பணத்தை, பள்ளியை சீரமைப்பதற்கு நிதியாக, தன் தாயோடு, பள்ளிக்கு வந்து கொடுத்தது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.
தற்போதைய செய்தி:
இதை அறிந்த ஒரு இஸ்லாமிய அமைப்பு, ஜாக்கிற்கு பிடித்தமான Apple IPad பரிசாக அளித்துள்ளது. அந்த அமைப்பு ஜாக்கிற்கு எழுதிய கடிதத்தில்...
"அன்புள்ள ஜாக், நீ பள்ளிவாசல் சேதமடைந்ததை கேள்விப்பட்டு, நீ விரும்பிய பொருளை வாங்காமல், உன்னுடயை கருணை மற்றும் கொடையுள்ளத்தாலும், அதை பள்ளியின் சீரமைப்பிற்காக வழங்கியுள்ளாய். அதற்காக, நீ விரும்பிய பொருளை, உனக்கு அனுப்பியுள்ளோம். நன்றி.
அன்புடன்
அமெரிக்க முஸ்லிம் சமுதாயம்"



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக