வியாழன், 19 நவம்பர், 2015

பாரிஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூறையாடப்பட்ட மசூதிக்கு நிதியுதவி செய்த அமெரிக்க சிறுவன்.

கடந்த வாரம் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலால் 129 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலுள்ள மசூதி ஒன்று சூறையாடப்பட்டிருந்தது.


கடந்த  திங்களன்று அந்த மசூதியை திறக்கச் சென்ற ஃபைசல் நயீம் மசூதியில் புனித நூலான குர்ஆன் கிழித்து வீசப்பட்டிருந்த நிலையைக் கண்டதும் கலங்கிப்போனார். இச்சம்பவம் பற்றி தெரிந்ததும் போலீசாரும், ஊடகத்தைச்  சேர்ந்த  பலரும்  அங்கு  கூடினர்.

இந்த கூட்டத்துக்கு இடையே ஏழு வயது ஜேக் ஸ்வான்சனும் அங்கு தனது அம்மா லோராவுடன் வந்திருந்தான். சூறையாடப்பட்ட மசூதியின் நிர்வாகி, ஃபைசலைச் சந்தித்து, சீரமைப்பு பணிகளுக்காக தனது சொந்த சேமிப்பாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த இருபது அமெரிக்க டாலர்களை வழங்கினான்.

இது  வெறும்  இருபது டாலர்களாக இருந்தாலும், ஜேக் வாழ்க்கையின் மொத்த சேமிப்புமே அதுதான்.  அதனை  பெருந்தன்மையுடன்  ஜேக்  முன்வந்து  வழங்கியதற்கு  ஃபைசல்  நன்றி  தெரிவித்துக்கொண்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...