இந்த ஐஎஸ் அமைப்பு வலியுறுத்தும் இஸ்லாமிய ஆட்சிக்கும் இறைவனும் இறைத்தூதரும் கூறியுள்ள இஸ்லாமிய ஆட்சிக்கும் கடுகளவும் தொடர்பில்லை.
இஸ்லாமிய ஆட்சியை இலட்சியமாய்க் கொள்பவர்கள் ஒருபோதும் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றொழிக்க மாட்டார்கள். அவ்வாறு செய்ய குர்ஆன் அனுமதிக்கவில்லை.
ஐஎஸ் அமைப்பு இஸ்லாத்திற்கு விரோதமான அமைப்பு என்று இந்திய மார்க்க அறிஞர்கள் உட்பட சர்வதேச மார்க்க அறிஞர்கள் வரை தெளிவாக அறிவித்துள்ளனர்.
உண்மையில் இந்தக் கொலைகார ஐஎஸ் அமைப்பினர் யார், இவர்களைப் பின்னணியில் இருந்து இயக்குவது எந்த சக்தி, இவர்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்குபவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் இந்த ஐஎஸ்ஸின் வண்டவாளம் வெளிவரக்கூடும்.
ஒரு காலத்தில் தாலிபான்களுக்குப் பின்னால் அமெரிக்க வல்லரசு இருந்ததுபோல், இப்போது ஐஎஸ்ஸுக்குப் பின்னால் மேற்கத்திய, சியோனிச சக்திகள் இருக்கக் கூடும் என்னும் தகவலையும் எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
சில முஸ்லிம் பெயர் தாங்கிகளைக் கொண்டே இஸ்லாத்தை அழித்து விடலாம் எனும் சியோனிச பன்னாட்டு சூழ்ச்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
-சிராஜுல்ஹஸன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக