கண்ணாடியை அணிந்து கொள்ளாமல் பார்க்கக் கூடிய வகையில் முப்பரிமாண (3டி) தொலைக்காட்சி, 3டி செல்போன் மற்றும் 3டி டேப் ஆகியவற்றை எபிகா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
3டி காட்சிகள் மட்டுமல்லாமல் 3டி வகையிலேயே சவுண்டு சிஸ்டமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சவுண்ட் சிஸ்டத்தை பெல்ஜியத்தை சேர்ந்த ஆரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தோடு இணைந்து வடிவமைத்துள்ளதாகவும் எபிகா நிறுவனத்தின் சிஇஓ சோஹன் ராய் தெரிவித்துள்ளார்.
கண்ணாடியை அணிந்து கொள்ளாமல் பார்க்கக் கூடிய வகையில் 3டி தொலைக்காட்சியை விளம்பரம், மருத்துவம், பொறியியல் கல்வி போன்றவற்றில் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக