வியாழன், 19 நவம்பர், 2015

விமானப்பணி பெண்ணிடம் அத்து மீறல்: இந்து மகாசபா பிரதிநிதி உட்பட 3 பேர் கைது!

கோவை விமான  நிலையத்திலிருந்து  இண்டிகோ விமானம்  ஒன்று  நேற்று (புதன்) இரவு 10 மணியளவில்   சென்னைக்கு புறப்படவிருந்தது. அப்போது விமானத்தில் ஏறிய 3 பேர், விமானப் பணிப்பெண் ஒருவரை தங்களின் மொபைல் போனில் படமெடுத்துள்ளனர். 

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பெண் 3 பேரையும் கண்டித்துள்ளார். அவருக்கு  ஆதரவாக  பிற  பயணிகளும்  கண்டித்துள்ளனர்.

இதனால் இரு தரப்புக்கும் தகராறு முற்றியுள்ளது. இது தொடர்பாக அந்த விமானத்தின் விமானி  அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த விமானப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த 3 போரையும், அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர்கள் பெருந்துறையைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜா மற்றும் திருச்சியைச் சேர்ந்த சுபாஷ் சுவாமிநாதன் என்றும் தெரியவந்தது. மூவரும்  வழக்கறிஞர்களாக  தொழில் செய்து வருகின்றனர். இதில் சுபாஷ் சுவாமிநாதன்  அகிலபாரத  இந்து மகா  சபையின் தமிழகப் பிரிவின் துணைத் தலைவராக  இருந்து  வருகிறார்.  

பின்னர் 3 பேரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...