முத்துப் பேட்டை அருகே சமையல் காரரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது செய்யப் பட்டார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அடுத்த ஜாம்பு வானோடை கல்லடிக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). சமையல் மாஸ்டர்.
இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் நேரு மகன் அய்யப்பனுக்கும் (30) முன் விரோதம் இருந்து வந்தது. இந் நிலையில் நேற்று மாலை ஆறுமுகமும், அய்யப்பனும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த அய்யப்பன், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் ஆறுமுகத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இது குறித்து முத்துப் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக