திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை தெற்குத் தெரு செக் போஸ்ட் அருகே வசிக்கும் சேக் முகம்மது மகன் புரோஸ்கான்(25), திமிலத் தெரு பகுதியில் வசிக்கும் சேக் நூர்தீன் மகன் செல்லவாப்பா என்கின்ற அசரப் அலி(35) ஆகியோர் கடந்த 14ம் தேதி மீன் பிடிப்பதற்காக முத்துப் பேட்டை படகில் மீன் பிடிக்க சென்றனர்.
நேற்று முன் தினம் புரோஸ்கான் இலங்கையில் உள்ள ஒரு மீனவரின் செல்போனிலிருந்து தனது தந்தை சேக்முகமதுவுக்கு போன் செய்தார். அப்போது தான் இலங்கையில் இருப்பதாகவும், மீன் பிடித்து விட்டு படகில் தூங்கிய போது இரவு நேரத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக வழி தவறி இலங்கை சென்று விட்டதாகவும் கூறினார்.
இச் சம்பவம் குறித்து முத்துப் பேட்டை கடலோர காவல் படையில் உயர் பதவி வகித்து வரும் ஒரு அதிகாரி நேற்று முன் தினம் காலையிலேயே ரகசியமாக விசாரணை மேற்கொண்டதாகவும், இதை மற்ற அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, 2 மீனவர்களும் இலங்கை கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
தற்போது, 2 மீனவர்களும் இலங்கை கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
இரு மீனவர்களின் தந்தை சேக்முகமது, சேக்நூர்தீன் கூறுகையில், கடல் சீற்றம் காரணமாக எங்களது மகன்கள் இரவில் திசை மாறி இலங்கைக்கு சென்றுள்ளனர். அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் கடற் படை போலீசாரும், மீனவதுறை அதிகாரிகளும் கூறுகின்றனர்.
எனவே தமிழக முதல்வர் எங்களது மகன்களை மீட்டு தர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றனர். இது குறித்து முத்துப் பேட்டை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் இஸ்மாயில் கூறுகையில்,
இச் சம்பவம் தொடர்பாக கடலோர காவல் படை அதிகாரிகளுக்கும், தமிழக முதல்வருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. விரைவில் இருவரையும் பத்திரமாக இந்தியா கொணடு வர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக