கடந்த 5 நாட்களாக முஸ்லிம் லீக்கின் நிவாரண பணிகள் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.
மருத்துவர்களை கொண்டு மருத்துவ முகாம்களும், மருந்து வழங்குதலும், உணவு பொட்டலங்கள் வழங்குவதையும் இயன்ற அளவு செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியிலும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
உடல் நலம் குன்றிய நிலையிலும் சமுதாயத்தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும், சமுதாயத்தின் சங்க நாதம் அப்துல் ரஹ்மான் அவர்களும், இளைஞர்களின் எழுச்சி நாயகன் பொது செயலாளர் அபூபக்கர் அவர்களும் இன்று நேரிடையாக களத்திற்கு சென்று நிவாரண பணிகளை செய்தனர்.
அரசின் மெத்தனப்போக்கை குறித்து நமது தலைவர்களிடத்தில் பொதுமக்கள் குமுறிய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக