வியாழன், 5 நவம்பர், 2015

இந்திய பணியாளர்களுக்கு விசாவை நிறுத்தியது குவைத் நாடு.


வளைகுடா  நாடுகளில் இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து  பணிப்பெண் உள்ளிட்ட வீட்டு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


 இதனால் இந்தியாவில் இருந்து வீட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு விசா வழங்குவதை  குவைத் அரசு நிறுத்திக் கொண்டுள்ளது.

 குவைத் அரசின் முடிவு பற்றி குவைத்திற்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் தொலைபேசி  மூலம் அளித்த தகவலின்படி, இந்திய பணியாளர்களுக்கு உறுதி தொகை அளிக்கும் ஒப்பந்தத்திற்கு உட்பட மறுக்கும் ஒரே வளைகுடா நாடு குவைத் தான். 

இந்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்திய பணியாளர்கள் அனைவருக்கும் 2500 டாலர்களை வங்கியில் உறுதித் தொகையாக மற்ற வளைகுடா நாடுகள் அளித்து வருகின்றன.

பணியாளர்களின் உரிமை  மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இது வழங்கப்படுகிறது.  தற்போது  குவைத் வரும் இந்திய பணியாளர்களுக்கு விசா வழங்குவதையும் குவைத் நிறுத்தி உள்ளது. 

இது குறித்து குவைத் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சட்ட விரோதமாக பணியாளர்கள்  குவைத்திற்குள் வருவதை தடுப்பதற்காக செய்திருப்பதாகவும், குவைத் வரும் பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தடுக்க தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கு வங்கி உத்தரவாத தொகை வழங்க குவைத் விரும்பவில்லை  என  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...