திங்கள், 2 நவம்பர், 2015

துபாயில் 1830 அடி உயரத்தில் இரும்புக் கயிற்றில் ஜிப்லைன் சாகசம்:


சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என ஏற்கனவே அழைக்கப்படும் துபாய் நாட்டின் பிரபல புர்ஜ் கலிபா கட்டிடத்தின் அருகே சுற்றுலாவாசிகளை கவரும் மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து துபாய் பவுன்ட்டைன் என்றழைக்கப்படும் அழகிய செயற்கை நீர்வீழ்ச்சியின் மேற்பரப்பில் 558 மீட்டர் (1830 அடி) உயரத்தில் ஜிப்லைன் எனப்படும் இரும்பு கம்பி பாதை வழியே, அந்தரத்தில் தொங்கியபடி, சறுக்கிச் சென்று, இங்குள்ள பிரபல வர்த்தக வளாகமான துபாய் மால் கட்டிடத்தின் மேல்தளத்தை நாற்பதே நொடிகளில் அடைந்து விடமுடியும்.

துபாய் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முஹம்மத், இந்த ஜிப்லைனில் சாகசச் சவாரி செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் அந்நாட்டின் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதேபோன்ற சாகசச் சவாரி மேற்கொள்ள விரும்புவர்கள் ’XDubai’ என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து நபர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம். அவர்கள் குறைந்தபட்சம் 130 சென்ட்டிமீட்டர் உயரமும், 50 முதல் 110 கிலோ எடை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் துணையுடன் வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...