ஞாயிறு, 1 நவம்பர், 2015

உடைக்க முடியாத பாஸ்வேர்டுகள் விற்பனைக்கு: அமெரிக்காவை கலக்கும் 11-வயது இந்திய வம்சாவளி மாணவி.


123456- இதுதான்  உலகில்  அதிகமாக பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (password) என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆகவேண்டும், அடுத்த இடத்தில் உள்ளது password.



 ஆமாம், பாஸ்வேர்டு என்பதையே பல அதிபுத்திசாலிகள் பாஸ்வேர்டாக பயன்படுத்துகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது அடுத்தவனின் கணினியை ஹேக் செய்வதையே முழுநேர தொழிலாக பல செய்து வருகிறார்கள். 

இதனால் வங்கி கணக்கு எண்கள், கடன் அட்டை எண்கள் போன்ற முக்கிய தகவல்கள்  அடிக்கடி திருடப்படுகிறது. இந்த பிரச்சனையை 2 டாலரில் தீர்க்க முடியும். அமெரிக்கவின் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவியான மிரா (11) எளிதில் உடைக்க முடியாத பாஸ்வேர்டுகளை  2  டாலருக்கு  விற்பனை  செய்துவருகிறார். 

மிரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி பாஸ்வேர்டுகளை உருவாக்கவில்லை,  அவர்  பயன்படுத்தும்  வழிமுறை  இதுதான்: 

நீங்கள் ஐந்து பகடை காய்களை உருட்டும்போது, 5 எண்கள் கிடைக்கும் உதாரணத்திற்கு  13465 என்று வருகிறது என்றால், இந்த எண்களுக்கு டைஸ் வார்த்தை பட்டியலில் (Diceware word list) இருக்கும் ஆங்கில வார்த்தை beach. உங்களுக்கு கொஞ்சம் கடினமான பாஸ்வேர்ட் வேண்டுமானால் 6 டைஸ்களை உருட்டுங்கள்.

இல்லை எனக்கு உளவு நிறுவனங்களால் கூட உடைக்க முடியாத பாஸ்வேர்டு வேண்டும் என்றால் 7 டைஸ்களை உருட்டுங்கள். 7 டைஸ்கள் மூலம்  கிடைக்கும் பாஸ்வேர்டை 2030-ம் ஆண்டுவரை உடைக்க முடியாதாம். 

இந்த எளிய வழிமுறையை பயன்படுத்திதான் மிரா பாஸ்வேர்டுகளை உருவாக்கி விற்பனை செய்து இளம் தொழில் முனைவராக  அமெரிக்காவை கலக்கி  வருகிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...