வெள்ளி, 6 நவம்பர், 2015

சவுதி அரேபியாவில் கையை இழந்த தமிழக பெண் கஸ்தூரி நாளை தமிழகம் திரும்புகிறார்.

சவூதி அரேபியா, ரியாத்திற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு இந்தியாவிலிருந்து  வந்த  தமிழ் பெண்மணி கஸ்தூரி அம்மாள் முனி ரத்தினம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 'கிங்டம்' மருத்துவமனையில் தொடர்  சிகிற்சை  பெற்று வந்தது அனைவரும் அறிந்ததே. 



'இந்தியன் சோசியல் போரம்' அமைப்பின் தொடர் முயற்சிகளாலும், சவூதி அரசும்,  இந்தியா தூதரகமும் இணைந்து எடுத்த துரித நடவடிக்கைகளால் அது  சம்பந்தமான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கஸ்தூரி அவர்களின் தாய் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற வற்புறுத்தலின் காரணமாக  நாளை   சனிக்கிழமை (07-11-2015) அன்று அதிகாலை 03:30 மணியளவில் ரியாத்திலிருந்து சென்னைக்கு செல்லும் சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில்  அனுப்பி  வைக்கப்பட  இருக்கிறார்.

அவரை வரவேற்று அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சேர்க்கும் ஏற்பாடுகளை  தாயகத்தில் உள்ள  'சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா செய்து வருகிறது.

அவருக்கு  ஏதாவது உதவிகளை செய்ய நினைக்கும் சவுதியில் உள்ள நல்லுள்ளங்கள் 'இந்தியன்  சோசியல் போரத்தின்' தமிழ் மாநில பொதுச்செயலாளர் இஞ்சினியர் ரஷீத் கான் அவர்களை 0564175702 என்கிற எண்ணிலும், செயலாளர் சர்தார் என்கிற சாகுல் ஹமீத் அவர்களை 0502314754 என்கிற எண்ணிலும் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தகவல். நெல்லை முகம்மது லெப்பை. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...