திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை டிராவல்ஸ் பங்களா சாலையில் வசிப்பவர் குமார். இவரது மகன் ஆனந்த(24).
இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். கடந்த சில தினங்களுக்கு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மர்ம காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று ஆனந்துக்கு காய்ச்சல் அதிகமானது இதனையடுத்து முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ஆனந்தை பரிசோதித்த டாக்டர்கள் இதில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதுபோல் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று அங்கிருந்து 108-ஆம்புலன்ஸ் மூலம் ஆனந்த் கொண்டு செல்லப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஏற்கனவே சமீபத்தில் முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் மங்களூர் கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர்.
இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரவி மேலும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக