வியாழன், 5 நவம்பர், 2015

முத்துப்பேட்டை பேரூராட்சியில் கொசு உற்பத்தி அதிகரிப்பு. நோய் பீதியில் மக்கள்.

முத்துப் பேட்டையில் கொசு உற்பத்தி அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர் முகம்மது  மாலிக்  புகார்  தெரிவித்துள்ளார். 

நேற்று அவர் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: 


முத்துப் பேட்டை  பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டை போல   டெங்கு, சிக்குன்   குனியா,  மலேரியா  போன்ற  நோய்  பரப்பும்  கொசுகள்   அதிகளவில்   பரவ தொடங்கி   உள்ளது.

 வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே   கொசு   ஒழிக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் முறையாக  செயல்பட வில்லை. 

இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி    வருகின்றனர். சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள்   குவிந்துள்ளன.

 சாலை யோரம் அள்ளப் படாமல் கிடக்கும் குப்பைகளால் பொது மக்களுக்கு பாதிப்பு  ஏற்படுகிறது. மழை நீர் செல்வதற்கு வசதி இல்லாததால் சாலைகளில்   தேங்கி   பொது  மக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப் படுகின்றனர்.

 இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போர்க் கால அடிப்படையில் நோய்களை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


கொய்யாத்தோப்பில் இருக்கும் ஒரு தெரு இது.  பல வருடங்களாக  இந்த சாக்கடைநீர்  மட்டும் அல்ல செப்டிக் டேங் கிலிருந்தும் நீர் வெளியாகி அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு உடல் அரிப்பு,  சுவாச கோளாறு  போன்றவை  ஏற்பட்டுள்ளது.

 இதனால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய ஒருவர் முத்துப்பேட்டை தனியார் மருத்துமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

என்று  இந்த  நிலை  மாறுமோ....???




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...