புதன், 4 நவம்பர், 2015

இயக்கமா ? இஸ்லாமா ? நீங்களே முடிவெடுங்கள்!


துவங்கி விட்டது சகோதர யுத்தம்!

கொடிக்கும் பெயருக்கும் 
கோர்ட்டில் வழக்கு!

பரஸ்பரம் குற்றச்சாட்டு !


பொதுகூட்ட எதிர்ப்பு !
போஸ்டர் கிழிப்பு !

முகநூளில் முகம்சுழிக்க
வைக்கும் பதிவுகள்!

சமூக வலைத்தளங்களில் 
சகிப்பின்மை பதிவுகள் !

ஒருவருக்கொருவர் 
முனாஃ பிக் ஃ பத்வா !

நேற்றுவரை தியாகி 
இன்று துரோகி!

நேற்றுவரை நேர்மையாளர் 
இன்று நேர்மையற்றவர் !

மாட்டுக் கறி உரிமைக்காக 
போராட வேண்டிய நாம் 
ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி 
மனிதக்கறி தின்னலாமா ?

சங் பரிவாருக்கு எதிராக 
பயன்படவேண்டிய சக்தியை 
சகோதரச் சண்டையில் 
நாம் வீணாக்கலாமா ?

சமுதாயத்தின் உரிமைகளுக்காக 
நீதிமன்றம் செல்லவேண்டிய நாம் 
சகோதர சண்டைகளுக்காக 
நீதிமன்றம் செல்லலாமா ?

சூழ்ந்து நிற்கும் அபாயத்தை 
சேர்ந்து நின்று எதிர்க்க வேண்டிய 
நாம் பிரிந்து நின்று போரிடலாமா ?

இஸ்லாத்துக்கு வக்கீலாக இருந்து 
வாதிடுவதை விட்டு 
இயக்கத்துக்கு வக்கீல்களாக 
நின்று வாதிடலாமா ?

நேற்றுவரை எதிரிகளாக இருந்தவர்களை 
சகோதரர்களாக்கியது இஸ்லாம் !

நேற்றுவரை சகோதரர்களாக இருந்தவர்களை 
எதிரிகளாக்கியது இயக்கம் !

இஸ்லாமிய நெறிகளை விட 
இயக்க வெறி மிகைக்க வேண்டாம் !

இது பட்டுத் திருந்தியவனின் 
பணிவான வேண்டுகோள் !
விட்டுக் கொடுங்கள் ! அல்லது 
விட்டு விலகுங்கள் !
முட்டிக் கொள்வதில் 
எந்த நன்மையையும் இல்லை !

இறைவன் கொடுக்க நினைப்பதை 
யாரும் தடுக்க முடியாது !

இறைவன் தடுக்க நினைப்பதை 
யாரும் கொடுக்க முடியாது!

இயக்கமா ? இஸ்லாமா ?
நீங்களே முடிவெடுங்கள்!

நிதானமாக சிந்திப்போம்!
நாளை இறைவனை சந்திப்போம்!

-செங்கிஸ்கான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...