திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீராகலுரை சேர்ந்தவர் பூங்குழலி (வயது–53) இவரும், அவரது மகள் சுதா (28) என்பவரும் நேற்று காரில் திருவாரூர் வந்தனர்.
கடைவீதியில் காரை நிறுத்திவிட்டு பூங்குழலியும், கார் டிரைவரும் கடைக்கு சென்றனர். சுதா மட்டும் காரில் அமர்ந்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் கார் கதவை தட்டி சுதாவிடம் பணம் வெளியே கிடப்பதாக கூறினார். அதனை நம்பி சுதா காரின் கதவை திறந்து வெளியே வந்தார்.
அப்போது காரில் சுதா வைத்திருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு மர்மமனிதன் தப்பி சென்று விட்டான். அந்த பையில் செல்போன், ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம்.கார்டு இருந்தது. அதனை பறிகொடுத்த சுதா அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்த கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக