புதன், 4 நவம்பர், 2015

102 வது மசூதியை வடிவமைக்க இருக்கும் திருவனந்தபுரம் கோவிந்தன் சகோதரர்கள்.



கேரளாவில் புதிய மசூதிகள் கட்டுவதானாலும் அல்லது பழைய மசூதி புதுப்பிக்கப் படுவதானாலும் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் இவர்தான்..

திருவனந்தபுரத்தைச் சார்ந்த கோவிந்தன் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து சகோதரர்கள்.


கோட்டங்கல், கடுவபல்லி, பீமப்பள்ளி, கருநாகப்பள்ளி போன்ற ஊர்களில் இவர் வடிவமைத்த பல பள்ளிகள் உண்டு.

கட்டிட கலைகளில் சிறந்து விளங்கும் இவர் பொறியியல் படித்தவர் இல்லை. தன் தந்தையோடு சிறுவயது முதலே கட்டிட வடிவமைப்பை கற்றுக்கொண்டார், பின்னாளில் அதன் அனுபவங்களை மெருகேற்றி இன்று கட்டிட  வடிவமைப்பில்  தனக்கென்று  ஒரு  இடத்தை  பிடித்திருக்கிறார்.

பெரும்பான்மையாக இவர் மசூதிகளை மட்டுமே வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

உங்களுக்கு  மசூதி  வடிவமைப்பில்  மட்டும் இவ்வளவு தொழில் நுட்பங்கள் தெரிந்திருக்கிறதே? அதற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு

" இறைவனால் எனக்கு கிடைத்த வரம் " என்கிறார்.

விரைவில் தனது 102 வது மசூதியை வடிவமைக்க இருக்கிறார்..

இந்து என்றும் இஸ்லாமியன் என்றும் பிரித்து, மத துவேஷங்களை விதைக்கும் மத அரசியலால் என்றுமே இம்மண்ணில் வெற்றி காணவே முடியாது..

தகவல். அலி சாலிஹ் அலி.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...