வெள்ளி, 6 நவம்பர், 2015

மனிதனால் வீசப்பட்ட குழந்தை நாயினால் காப்பாற்ற பட்ட சம்பவம் ஓமனில் நடந்துள்ளது.

வீதியில்  வீசப்பட்ட குழந்தை  நாய் வாயால் கௌவ்விச் செல்லும் படம் இணையத்தில்  வெளியாகி  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


இந்நிலையில்  இச்சம்பவம்  பற்றி சவுதி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமானில் இச்சம்பவம்   நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்ட இந்த குழந்தை  தொப்புள் கொடியுடன் காணப்பட்டது.  இந்த சிசுவை நாயொன்று தூக்கிச்சென்று அருகில்  இருந்த  வீட்டு  வாசலில்  போட்டுள்ளது.

மேலும்  வாசலில்  நின்று அந்த நாய் குரைத்துக்கொண்டே இருந்துள்ளது.  நாயின்  சப்தம் கேட்டு வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உயிரோடு சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள்  குழந்தையை உடன் அருகில் இருந்த  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

 மருத்துவமனையில் பரிதோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரோடும்   காயம் ஏதும் இல்லாமல் இருப்பதாக  தெரிவித்தனர்.

நாயின் புத்திக் கூர்மையான செயலால்  குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

தகவல். ஹிதாயத்துல்லா. உசிலை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...