வியாழன், 5 நவம்பர், 2015

அமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியது: 4 பேர் காயம்.


உலகப் புகழ்பெற்ற சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் முன்னாள்  தலைவர்  கில்டிமோர். 
இவரும்  மற்ற  2 பேரும் அமெரிக்காவில் ஆர்கான்சஸ்சில் இருந்து டெக்சாஸ் நகருக்கு குட்டி விமானத்தில்  புறப்பட்டு  சென்றனர். 


புறப்பட்ட  சிறிது நேரத்தில் விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. எனவே  விமானி  அந்த  குட்டி விமானத்தை நடுரோட்டில் தரை இறக்கினார்.

இது  பாராசூட் மூலம் தரை இறக்கும் வசதி படைத்தது. இந்த நிலையில் தரை இறங்கியபோது  அந்த  விமானம் ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த  விபத்தில் விமானத்தில் இருந்த கில்டிமோர் உள்பட 3 பேரும், லாரியில் பயணம் செய்த ஒரு பெண்ணும் ஆக 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.

 அமெரிக்காவில் இது போன்ற குட்டி விமானங்கள் எதிர்பாராத விதமாக நடுரோட்டில்  இறக்கப்படுவது  சகஜமாகி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...