வெள்ளி, 23 அக்டோபர், 2015

ஆசியாவின் மோசமான விமான நிலையம் சென்னை


ஆசியாவின் மிக மோசமான விமான நிலையம் குறித்து ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சென்னை விமானநிலையம் 7வது இடம்படித்துள்ளது.


தி கைடு டு ஸ்லீப்பிங் இன் ஏர்போர்ட்ஸ், ஆசியாவின் மோசமான விமான நிலையங்கள் குறித்து செப்டம்பர் 2014 முதல் செப்டம்பர் 2015 வரை ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தியது.

 இதில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த பயணிகள்  பலர் சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் முறை மோசமாக உள்ளதாகவும், கழிப்பறைகள் சுத்தமின்றி இருப்பதாகவும் புகார் கூறி உள்ளனர் . பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்வதற்கு ஊழியர்கள்  யாரும்  எவ்வித  உதவியும் செய்வதில்லை என கூறி உள்ளனர்.

பயணிகளுக்கு உதவாத ஊழியர்கள், சுத்தமில்லாத கழிப்பறைகள் ஆகியன ஒருபுறம் இருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் மோசமான பராமரிப்பு காரணமாக சில ஆண்டுகளாக ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய பராமரிப்பிற்காக ஏராளமான பணம் செலவிடப்பட்டும் இன்னும் சென்னை விமான நிலையம் உலக தரத்திற்கு உயரவே இல்லை.

சென்னை விமான நிலையத்தில் உள்ள குறைபாடுகள், மோசமான பராமரிப்பு ஆகியவை குறித்து சமூக வலைதளங்களிலும் விடாமல் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. புகார்கள் பல கூறப்பட்டாலும், சமூக வலைதளங்களில் கிண்டல்கள் பரவினாலும் அவற்றால் எந்த பயனும் இல்லை.

 சென்னை விமான நிலையத்தின் நிலை மோசமாக இருப்பதை இந்த ஓட்டெடுப்பு உறுதிப்படுத்தி உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...