செவ்வாய், 20 அக்டோபர், 2015

விமான பயணத்தில் தகராறு. பயணியை கடித்த மற்றொரு பயணி சாவு.


அயர்லாந்தை  சேர்ந்த ஏர் லிங்கஸ் விமானம், 18-ந் தேதி போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் இருந்து, அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நோக்கி சென்று கொண்டிருந்தது. 

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது,  பிரேசிலை சேர்ந்த 24 வயதான ஒரு பயணிக்கும், அவர் அருகில்


அமர்ந்திருந்த இன்னொரு பயணிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பிரேசிலை சேர்ந்த பயணி, அந்த பயணியை கடித்து குதறினார். 

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் கடித்த பிரேசில் பயணி மயங்கி சரிந்தார். நினைவு இழந்தார். அவருக்கு விமானத்தில் இருந்த ஒரு டாக்டரும், நர்சும் முதலுதவி அளிக்க முயன்றனர். ஆனால் அவரிடம் எந்த அசைவும் இல்லை. விமானத்தில் மற்ற பயணிகள் இடையே பதற்றம் ஏற்பட்டது.

உடனே விமானம், டப்ளின் செல்வதற்கு பதிலாக அயர்லாந்தில் உள்ள கார்க் நகருக்கு திருப்பி விடப்பட்டது. அவசர அவசரமாக அந்த விமானம், கார்க் நகரில் தரை இறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர் குழுவினர் அந்த பிரேசில் பயணியை பரிசோதித்தபோது, ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டது தெரிய வந்தது. 

அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரியவரும்.அவரால் கடித்து குதறப்பட்ட பயணி, கார்க்கில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே பிரேசில் பயணியுடன் வந்த 44 வயது போர்ச்சுக்கல் பெண் 2 கிலோ போதைப் பொருட்களை தனது பெட்டியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மற்ற பயணிகள் கார்க்கில் இருந்து டப்ளின் நகருக்கு பஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

பிரேசில் பயணியை பற்றி தகவல்கள், டப்ளினில் உள்ள பிரேசில் தூதரகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...