புதன், 21 அக்டோபர், 2015

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா. படங்கள் இணைப்பு.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படித்துவந்தார் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். 



புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலாராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். 

ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அகமது கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கைது செய்யப்பட்ட முஸ்லிம் மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிபர் ஒபாமா அவரை வெள்ளை மாளிகையில்  நடைபெறும் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்தில் கலந்துக்கொள்ள அழைப்புவிடுத்திருந்தார். 

இதன்படி நேற்று முன்தினம் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்து அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிக்கையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அகமது முகமது, அதிபர் ஒபாமாவுடன் கை குழுக்கி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா குழந்தைகளிடமிருக்கும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கவேண்டும் என தெரிவித்தார். ஆனால் அகமதுவை பற்றி தனியாக எதுவும் பேசவில்லை.

அஹமது சில நாட்களுக்கு முன்புதான் குடும்பத்தாரோடு சவுதி மன்னர் சல்மான் அவர்களின் விருந்தாளியாக மக்கா சென்று உம்ரா செய்து வந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...