முத்துப்பேட்டை ஓடக்கரையில் ஆர்டிஸ்ட் அப்துல்ரஹ்மான் வீட்டிற்கு முன்புறம் நேற்று இரவு 9.30 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் நின்றுள்ளார்.
பட்டுக்கோட்டையிலிருந்து வந்த தனியார் பேருந்தின் மீது அந்த மர்ம நபர் கல்வீசி தாக்கிவிட்டு தப்பியோடினான். இதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது.
கண்ணாடி உடைந்த சப்தம் மிகப்பெரிய அளவில் கேட்டதால் சுற்றி இருந்த வர்கள் கூடிவிட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டு கல் வீசிய நபரை பிடிக்க டிரைவரும், கண்டக்டரும் ஓடினர். ஆனால் மர்ம நபர் செக்கடி குளத்தின் இருட்டில் மாயமானான்.
நல்லவேளையாக பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் இல்லை.. இதுகுறித்து பேருந்தின் டிரைவர் சுப்பிரமணியன் கண்டக்டர் சேதுபதி ஆகியோர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்தின் மீது கல்வீசி தாக்கிய மர்ம நபரை தேடி வருகிறார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக