செவ்வாய், 20 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை அருகே லாரி, அரசு பேருந்து மோதல். டிரைவர், பயணிகள் உட்பட 4 பேர் காயம்.


முத்துப்பேட்டை அடுத்த பாண்டியில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்த லாரியும், முத்துப்பேட்டையிலிருத்து வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. 


இதில் அரசு பேருந்து டிரைவர் வீரமணி மற்றும் பேருந்தில் முன் பகுதியில் அமர்ந்து வந்த பெண் பயணிகள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதனையடுத்து அதே பகுதியில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஒன்றிய கவுன்சிலர் பாரதிதாசன் தலைமையில் அ.தி.மு.கவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

 இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

முத்துப்பேட்டை  அருகே  டேங்கர் லாரி, அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்.

 முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற ஆயில் டேங்கர் லாரியும் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது.

 இதில் டேங்கர் லாரியும் அரசு பேருந்தும் முன் பகுதி முழுவதும் சேதமாகியது. இந்த விபத்தில் இரண்டு டிரைவர்களும் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

படம்  செய்தி:  நிருபர்- மு. முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்தான டேங்கர் லாரி மற்றும் அரசு பேருந்து.


முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைத்தெருவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான லாரி மற்றும் அரசு பேருந்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...