திங்கள், 19 அக்டோபர், 2015

2 முஸ்லீம் வாலிபர்களை அடித்து பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறிய மும்பை போலீஸ்.



மும்பை  பந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இரண்டு முஸ்லீம் வாலிபர்களை தாக்கி அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா  மாநிலம்  மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆசிப் ஷேக்(19), தனிஷ் ஷேக்(19). அவர்கள் இருவரையும்



இன்ஸ்பெக்டர் கேதர் பவார் உள்ளிட்ட போலீசார் கடந்த சனிக்கிழமை இரவு பந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச்  சென்று அடித்து பாகிஸ்தானுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்   என்று  கூறப்படுகிறது.


பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்று கூறி அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு பவார் தெரிவித்துள்ளார் என ஆசிபின் உறவினர் கூறியுள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சனிக்கிழமை இரவு 2.30 மணிக்கு அவர்களை பந்த்ரா பகுதியில் இருந்து அழைத்து வந்தோம். அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். காவல் நிலையத்தில் ஆசிப் போலீசாரை திட்டியதுடன், தனக்கு அதிகாரம் மிக்க முஸ்லீம்  அரசியல்  தலைவர்களை  தெரியும்  என்றார்.

மேலும் அவர் இன்ஸ்பெக்டர் பவாரை மூன்று முறை குத்தினார். காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கியை எடுக்கச் சென்றார். அவர்கள் இருவருக்கும்  காயம் எப்படி ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரிய வரும் என்றார்.

இந்த சம்பவம் குறித்து ஆசிபின் உறவினர் உமர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து துணை கமிஷனர் விசாரணையை துவங்கியுள்ளார் என மும்பை போலீஸ் கமிஷனர் அகமது ஜாவித் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...