முத்துப்பேட்டை அருகே உள்ள ஆரியலூரை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜம்புநாதன் என்பவருக்கும், சிவகுமார் மகன் திலிபன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னயா என்பவர் மனைவி குஞ்சம்மாள் இறந்து விட்டார். அவரது இறுதிசடங்கு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திலிபன் தனது நண்பர்கள் முகேஸ், அருள்நிதி, தனசேகரன், புகழேந்தி, தமிழ்பாரதி, பாலசுப்பிரமணியன் உள்பட சிலர் ஜம்புநாதனிடம் தகராறு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஜம்புநாதன் வீட்டுக்கு சென்று பொருட்களை சூறையாடினர். இதனை ஜம்புநாதனின் பாட்டி மாரிமுத்து தடுத்தார். அவரை அந்த கும்பல் தாக்கியதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி ஜெயராமன் எடையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்நிதி, புகழேந்தி, தமிழ்பாரதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 10 பேரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக