வெள்ளி, 23 அக்டோபர், 2015

கார் வாங்கியதில் பணம் பாக்கி: வாலிபரை கடத்தி அறையில் அடைப்பு- திருவாரூரில் 8 பேர் கைது.


திருச்சியை சேர்ந்தவர் அசாருதீன்(29). இவர் அதே பகுதியை சேர்ந்த பரூக் என்பவர் மூலம் கார் வாங்கி உள்ளார். இதில் ரூ. 80 ஆயிரம் அசாருதீன் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


இதனை பருக் பல முறை திருப்பி கேட்டும் அசாருதீன் கொடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த  பரூக்  தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அசாருதீனை கடத்தி திருவாரூர் கொண்டு வந்தனர்.

இங்கு வந்த பரூக் தனது நண்பர்களான கணேசன், என்ஜினீயர் ரோமி ஆகியோருடன்  உதவி  கேட்டுள்ளார்.

அதன் படி திருவாரூரில் உள்ள கணேசனின் அறையில் அசாருதீனை அடைத்து  வைத்துள்ளனர். இந்த நிலையில் அசாருதீனை   காணவில்லை என  அவரது  குடும்பத்தினர்  திருச்சி  போலீசில்  புகார் கொடுத்தனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அசாருதீன் திருவாரூரில்  கடத்தி  வைக்கப்பட்டு  இருப்பது  தெரிய வந்தது. உடனடியாக திருச்சி போலீசார் திருவாரூர் வந்தனர். அங்கு கணேசன் அறையில்  அடைத்து  வைக்கப்பட்டிருந்த  அசாருதீனை  மீட்டனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி பரூக் உள்பட 6 பேர் மற்றும் கடத்தலுக்கு  உதவிய  திருவாரூரை  சேர்ந்த  கணேசன்,  ரோமி  ஆகிய  2  பேர்  என  மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...