திங்கள், 19 அக்டோபர், 2015

முத்துப்பேட்டை அருகே தனியார் பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்கள் கைது.

முத்துப்பேட்டை  அருகே வசூல் போட்டியால் மோதிக் கொண்ட தனியார் பேருந்துகளின்  4  டிரைவர், கண்டக்டர்கள்  கைது  செய்யப் பட்டனர்.



முத்துப் பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் திருத்துறைப் பூண்டியிலிருந்து பட்டுக் கோட்டைக்கு போட்டி போட்டு கொண்டு வந்து கொண்டிருந்த 2 தனியார்  பேருந்துகள்  உப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி டிரைவர், கண்டக்டர்கள்  தகராறு செய்து ஒருவருக் கொருவர் தாக்கிக் கொண்டனர்.  இதில் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து இரு தரப்பினரும் முத்துப் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து எஸ் எஸ்ஐ  வேதரெத்தினம்  வழக்கு  பதிவு செய்து டிரைவர்கள்  ரவிச்சந்திரன், பிரகாஷ், கண்டக்டர்கள் குகன்ராஜ், பாலசுந்தரம்  ஆகிய  4  பேரையும்  கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...