வெள்ளி, 23 அக்டோபர், 2015

ஆஸ்திரேலியாவில் 70 மில்லியன் டாலர் செலவில் இந்தியர் கட்டிய தாஜ்மஹால் வடிவ கட்டிடம் தரைமட்டம் ஆகின்றது.


ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 70 மில்லியன் டாலர் செலவில் இந்தியர் கட்டிய தாஜ்மஹால் வடிவ கட்டிடத்தை இடித்து, தரைமட்டம் ஆக்க உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் உரத்தொழிற்சாலை நடத்தி மிகப்பெரிய செலவந்தராக திகழ்ந்த பங்கஜ் ஓஸ்வால் - ராதிகா ஓஸ்வால் தம்பதியர் இங்குள்ள பெர்த் நகரில் 25  லட்சம் மில்லியன் டாலர்களுக்கு மிகப்பெரிய வீட்டுமனை ஒன்றை  வாங்கியிருந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு 6,600 சதுரடி பரப்பில் சுமார் 40 லட்சம் மில்லியன் டாலர்களை செலவிட்டு கோயில், உடற்பயிற்சிக்கூடம், மற்றும் மொட்டை மாடியில் 17 கார்கள் நிறுத்தக்கூடிய சுழலும் வசதியுடன் கூடிய பார்க்கிங் பகுதியையும்  இவர்கள்  கட்டிவந்தனர்.

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு தொழிலில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதால் பங்கஜ் ஓஸ்வால் - ராதிகா ஓஸ்வால் தம்பதியர் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து, அந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆஸ்திரேலிய அரசுக்கு இவர்கள் வரிபாக்கியாக  மிகப்பெரிய  தொகையை  கட்ட வேண்டியிருந்தது.

அதுமட்டுமின்றி, கட்டிட வேலை நடைபெற்றுவந்த இடத்துக்காக உள்ளூர் நிர்வாகத்துக்கு கட்டவேண்டிய வரி,வகையறாக்களும் செலுத்தப்படாமல் இருந்தது. மேலும், பாதிநிலையில் கைவிடப்பட்ட அந்த கட்டிடத்தில் தொடர்ந்து சமூகவிரோதச் செயல்கள் நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் போலீசாரிடம்  புகார்  அளித்து  வந்தனர்.

அந்த கட்டிடத்தால் சுற்றுப்பட்டில் வசிக்கும் மக்களின் அமைதியும், நிம்மதியும் சீர்குலைந்து வருவதாக உள்ளூர் நிர்வாகத்துக்கும் அடுத்தடுத்து புகார்கள் அனுப்பப்பட்டன. இதனிடையில், செலுத்த வேண்டிய வரிபாக்கிக்காக அந்த இடத்தை கைப்பற்ற உள்ளூர் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதற்காக, தாஜ்மஹால் வடிவ கட்டிடத்தை இடித்து, தரைமட்டம் ஆக்க அனுமதி கோரி உள்ளூர் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக, இந்த நடவடிக்கைக்கு தடைகேட்டு தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை ஓஸ்வால் தம்பதியர் சமீபத்தில் திரும்ப பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் அந்த கட்டிடத்தை இடிக்கும் வேலைகளை தொடங்கி, 30-9-2016-க்குள் காலி மனையை உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான செலவினங்களை பங்கஜ் ஓஸ்வால் - ராதிகா ஓஸ்வால் தம்பதியர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...