திங்கள், 19 அக்டோபர், 2015

வேலூர் செஸ் போட்டியில் சர்வதேச கிராண்ட் மாஸ்டருடன் மோதி அபார வெற்றி பெற்ற 7-ம் வகுப்பு மாணவர் முகமதுஅனீஸ்.



வேலூர் மாவட்ட செஸ் அகாடமி மற்றும் ரிமோட் செஸ் அகாடமி சார்பில், 16 மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான செஸ் போட்டி காட்பாடியில் 2 நாட்கள் நடந்தது.

 ‘ரேபிட்’ போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் நாள் போட்டியில் 10 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 20 பேர் வெற்றி பெற்றனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 20 மாணவர்கள், 20 மாணவிகள் என மொத்தம் 40 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இரண்டாம் நாளில் வேலூர், திருவண்ணாமலை, சேலர், தஞ்சாவூர், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 69 மாணவ, மாணவிகளுடன் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சர்வதேச கிராண்ட் மாஸ்டர் இகோர் ஸ்மிர்நோவ் என்பவர் ஒரே நேரத்தில் விளையாடினார். நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டி மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.

இதில், ஒசூர்  மகரிஷி மந்திர் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமது அனீஸ் வெற்றி பெற்றார். அவருக்கு சர்வதேச கிராண்ட் மாஸ்டர் இகோர் ஸ்மிர்நோவ் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 முகமது அனீஸ், இதற்கு முன்பு நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் 20 முறையும், மாநில அளவிலான செஸ் போட்டிகளில் 15 முறை வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது இகோர் ஸ்மிர்நோவ் உடன் மோதி வெற்றி பெற்றதால், உலக தரவரிசையில் 1,699 புள்ளிகளை முகமதுஅனீஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிட்டத் தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...