செவ்வாய், 20 அக்டோபர், 2015

பாகிஸ்தானுக்கு சுற்றுலா வரும் இந்தியருக்கு இலவச உணவு தரும் பாகிஸ்தானியர்.


பாகிஸ்தானை சேர்ந்தவர் இக்பால் லத்தீப். இவர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவரில் 26 அமெரிக்க டன்கின் டொனட்ஸ் சர்வதேச உணவு விடுதிகளை நடத்தி வருகிறார்.



இவர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குறுகிய கால ‘விசா’வில் சுற்றுலா வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி உபசரிக்கிறார். பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூரில் 2,432 பேருக்கு இலவச உணவு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பாகிஸ்தான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘தான் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அனைவரிடத்திலும் அன்பாக இருப்பதையே விரும்புவதாக கூறினார்.

அண்டை நாட்டினரை நடத்துவது எப்படி என்பது குறித்து அவர் கூறிய கருத்துக்கள்படி நடப்பதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் கடந்த வாரம் மும்பை வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேருக்கு இரவில் அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகளில் தங்க இடம் தர மறுத்ததை சுட்டிக் காட்டி வேதனையை வெளிப்படுத்தினார்.

அவர்கள் ரோட்டோரத்திலும், ரெயில் நிலையத்திலும் இரவு நேரத்தில் தங்கியிருந்ததை சுட்டிக் காட்டி வருத்தம் அடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...