வெள்ளி, 30 அக்டோபர், 2015

குறைந்த டிக்கெட் விலையுடன் கூடிய புதிய விமான பயணக் கொள்கையை வெளியிட மத்திய அரசு திட்டம்.


மத்திய அரசு புதிய விமான பயணக் கொள்கையை வடிவமைத்துள்ளது.  இதன்படி குறைந்த பட்ச கட்டணமாக 2,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக  தெரிகிறது.



உள்நாட்டு  மற்றும்  சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 2 சதவீத லெவி வரி விதிக்கவும் மத்திய விமானத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து  பல்வேறு  நிலைகளில்  ஆலோசனை  நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இதன் இறுதி முடிவுக்காக பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பங்குதாரர்களின் பரிந்துரைக்குப் பின்  புதிய விமானப் பயணக் கொள்கை வெளியிடப்படும் என விமான போக்குவரத்து  துறை  அமைச்சர்  கஜபதி  ராஜூ  தெரிவித்துள்ளார்.

 புதிய விமான பயணக் கொள்கைகயின்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 2 சதவீத லெவி வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் ஏர்லைன்ஸ் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவைகளுக்கு வரி, விமானத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 50 சதவீதத்திற் மேல் அதிகரிக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு  விமான  கொள்கையின்படி  அதிகமான  மக்கள் விமான சேவையை  பயன்படுத்த  வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டுள்ளதாக சிவில்  விமான  போக்குவரத்து செயலாளர் ராஜீவ் நயன் செளபே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...