வியாழன், 29 அக்டோபர், 2015

முத்துப்பேட்டையை சேர்ந்த பழம்பெரும் நடிகருக்கு நடிகர் சங்கம் நிதியுதவி.

முத்துப் பேட்டையை சேர்ந்த பழம் பெரும் நடிகர் முகமது காசிமுக்கு நடிகர் சங்கம்  ரூ.15  ஆயிரம்  நிதியுதவி  வழங்கியது.

முத்துப் பேட்டை சரீப் தெருவை சேர்ந்தவர் முகமது காசிம் மரைக்காயர். (80). பழம் பெரும் நடிகர்.



 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்,  சிவாஜியுடன்  அதிகளவில்  சிறிய வேடங்களில் நடித்துள்ளார். 

பெரும்பாலும்  இவர்  போலீஸ்  வேடம்  தான்  ஏற்று நடிப்பார். திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவான பூம்புகார் படத்தில் இளங்கோவடிகள்  வேடத்தில்  நடித்தார்.

இவருக்கு பசீர் அகமது, சுல்தான், அன்சாரி, ஜின்னா என்ற 4 மகன்கள், பரீதா, பவுஷியா, ரகுமத், நஜிமா, ஷகிலா என்ற 5 மகள்கள் உள்ளனர்.  கடந்த 3 ஆண்டாக  உடல்  நலக்  குறைவால்  அவதிப் பட்டு  வருகிறார். 

தற்போது திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகன்களுக்கு பெரிய அளவில் வருமானம் இல்லை. இதனால்  மருத்துவ செலவுக்கு போதிய பணமின்றி அவதிப் பட்டு வருகிறார்.

இதை  அறிந்த நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், சங்க நிர்வாகிகளிடம் ஆலோசித்து இவருக்கு மருத்துவ உதவிக்கு ரூ.15 ஆயிரம் வழங்க நடவடிக்கை  எடுத்தார்.  அதன்படி இவருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பழம் பெரும் நடிகர் முகமது காசிம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...