முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அடஞ்ச விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் மு. அய்யப்பன் (35).
இவரது வீட்டில் பின்புறம் உள்ள வாய்க்காலில் அதே பகுதியைச் சேர்ந்த கா. அய்யப்பன் என்பவர் மீன் பிடிக்க வலை விரித்திருந்தார்.
நேற்று முன் தினம் மாலை வாய்க்காலுக்கு சென்று பார்த்த போது வலை மற்றும் மீன்களை காணவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கா. அய்யப்பன், அருகே வசிக்கும் மு. அய்யப்பன் மீது சந்தேகப் பட்டு திட்டினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப் படுத்தினர்.
இந் நிலையில் அன்று நள்ளிரவு முனியப்பன் மகன் அய்யப்பன் வீட்டுக்கு சென்ற கா.அய்யப்பன் அவரை கத்தியால் குத்தி விட்டு ஓடினார். இதில் மு.அய்யப்பனுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு குடல் சரிந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் முத்துப் பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ் எஸ்.ஐ மதியழகன் வழக்கு பதிவு செய்து கா. அய்யப்பனை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக