அமீரகம் என்றழைக்கப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியாவின் கள்ள நோட்டுகள் பெருமளவு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகள் அச்சிட பயன்படுத்துகிற எந்திரங்கள் அதிநவீன எந்திரங்கள் என்றும், அதில் அச்சிடப்படுகிற நோட்டுகள் அசல் ரூபாய் நோட்டுகள் போலவே மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அசல் நோட்டுக்கும், கள்ள நோட்டுக்கும் இடையே சாமானிய மக்களோ அல்லது அன்னியச்செலவாணி மாற்று நிறுவனங்களின் ஊழியர்களோ வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது என தகவல்கள் கூறுகின்றன. கள்ள நோட்டு வழக்கில் அன்னியச்செலவாணி நிறுவன ஊழியர் ஒருவர் அமீரக சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது வக்கீல்தான் இப்போது மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றுகிற போது எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும், அன்னியச்செலவாணி மாற்று நிறுவனங்கள் கள்ள நோட்டுகளை கண்டறிகிற நவீன எந்திரங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்புகிறவர்கள், கள்ள நோட்டு வழக்குகளில் சிக்குவது அதிகரித்து வருவதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக