சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர் இன்று உலகின் பணக்கார நாடுகளில், வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது.
உலகில் உள்ள சுத்தமான தரமான வசதியான விமான நிலையம் என எட்டு முறை முதல்நிலையில் தேர்வாகி் உள்ளது.
ஒருவருடத்தில் சாங்கி் விமான நிலையம் பல மில்லியன் பயணிகளை கையாள்கிறது.
இருபத்தி்நான்கு மணி நேரமும் சுத்தமான குடிநீர், மின்சாரம், தரமான சாலை வசதிகள், அனைவரும் எளிய முறையில் பயணம் செய்ய சிறந்த பொது போக்குவரத்து வசதி கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.
மேலும், எங்கும் எதிலும் சுத்தமான நகரம், எதிலும் ஒரு ஒழுக்கம், பாதுகாப்பான சட்டதிட்டங்கள், லஞ்சமில்லாத அதே நேரம் குறிப்பிட்ட நேரங்களில் சிறந்த சேவை தரம் என மக்கள் வாழ விரும்பும் நகரங்களில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளது.
இப்படி வேகமாக முன்னேற முதற்காரணம் திரு. லீ குவான் யூ. அவருக்கு உடனிருந்து ஆக்கபூர்வமான ஆலோசனை தந்த மூத்தோர்கள், கடுமையான உழைப்பாளிகள், என அனைத்தும் சேர்ந்துதான் இன்று இவ்வளவு சாதனைகளை கொண்டுள்ளது இந்த சிறிய சிங்கப்பூர் நாடு.
இந்த நாட்டிற்கு தமிழகத்திலிருந்து கூலித்தொழிலாளிகளாக வந்து நாட்டின் விடுதலையிலும் கலந்து கொண்டு இன்று சிறந்த முறையில் வேறுன்றி் உள்ள தமிழர்களான நமக்கும் பங்குள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாகவே உள்ளது.
சிவாஜி.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக