ஞாயிறு, 25 அக்டோபர், 2015

அழகுக்குறிப்பால் வந்த வினை: வாடிக்கையாளர்களின் முகத்தை பதம் பார்த்த லவங்கப்பட்டை கிரீம்


பிரெஞ்சு பெண்ணான மேரி லோபெஸ் சொல்லும் அழகுக் குறிப்புகளுக்கு யூடியூபில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் இவர் சாக்லேட், வாழைப்பழம் மற்றும் லவங்கப்பட்டை அடங்கிய ஒரு


 முகக்களிம்பை வீட்டிலேயே தயாரித்து பூசிக்கொள்ளுமாறு ஒரு வீடியோ  குறிப்பினை  வெளியிட்டிருந்தார்.

மசாலாப் பொருளில் ஒன்றான லவங்கப்பட்டை பொதுவாக சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தலாம். இதனைக் குறிப்பிடாமல், மேரி சொன்ன இந்தக் குறிப்பை  ரசிகர்கள் பலரும் முயற்சித்துள்ளனர். இது அவர்களுக்கு முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த  மசாலாப் பொருளால் ஒரு பெண்ணுக்கு முகம் மோசமாக வெந்து, தனது மென்மையை இழந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு மருத்துவம் செய்த தோல் நிபுணர் இதுபோல முக அழகை மேம்படுத்த அழகுக் குறிப்பு என சொல்லும், பொருளையெல்லாம் கண்மூடித்தனமாக பூசுவது தவறு என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக பேசிய மேரி, தனது சிறு வயது முதலே இந்த முகக்களிம்பை பூசி வருவதாகவும், அது இத்தகைய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை  எனவும்  கருத்து  தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...