வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஒரு முஸ்லிம் கல்வியாளர் கடிதம் மூலம் வெளிப்படுத்திய அவரின் உள்ளக் குமுறல்.


என்  தாய்,  தந்தை, என் சமூகத்தை பார்த்து கேட்கின்றேன்........

பள்ளிப் படிப்பு 14 ஆண்டுகள், கல்லூரி படிப்பு 6 ஆண்டுகள்,ஆக மொத்தம் 20 ஆண்டுகள்.  3 வயதில் துவங்கி 25 வயது வரை எனக்கு கணிதம், இயற்பியல் ,வேதியியல், உயிரியல், வரலாறு,  அரசியல், அறிவியல் என்று ஏராளமான புத்தக  மூட்டைகளை  என்  முதுகில்  சுமக்க  வைத்தீர்கள்.....அதை மனப்பாடம்  செய்யச்  சொல்லி  என்னை  நிர்பந்தம் செய்தீர்கள்....



எனது இயல்பையும், அறிவுத் தகுதியையும், நினைவாற்றலையும் புரிந்து கொள்ள  நீங்கள் தயாராக இல்லை.  பாடங்களில் சிலவற்றை புரிந்துகொள்ள சிரமமாக  இருந்த போது என்னை அடித்து உதைத்து வசை சொற்களால் வாட்டி எடுத்தீர்கள்.

எனது விருப்பத்தை அறிந்துகொள்ள முயற்சிக்காமல் உங்களது ஆசைகளையும் சமூக நெருக்கடிகளையும் என் மீது திணித்தீர்கள்.

 ஆனால்.....நான் ஏன் படைக்கப்பட்டேன்.....? எனது தாய்க்கும் தந்தைக்கும் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன....?  இந்த உலக வாழ்வில் எனது பொறுப்புகளும் கடமைகளும் என்ன..?எதையாவது சொல்லித் தந்தீர்களா....?

நான்  கனவுகளில்  கற்பனை  செய்து காத்திருந்த....எனது இயற்கை தேவையாக.....என்னவளாக....என்னோடு வாழ்நாள் முழுதும் பயணிக்கப் போகும்  எனது  மனைவி  என்ற  உயிர்  ஜீவன்  குறித்து எனக்கு எதையாவது சொல்லித் தந்தீர்களா....?

எனது ஆண்மையின் அடையாளமாக அவள் தந்த எனது வாரிசுகளை நான் எப்படி  வளர்த்தெடுக்க வேண்டும் என்பது குறித்து எதையாவது இந்த 20 ஆண்டு கால கல்வியில் எனக்கு சொல்லித் தந்தீர்களா....?

இதே போல..... ஒரு ஆண் யார் என்ன குணங்கள் நோக்கம் என்பதை 15- 20 ஆண்டுகள் பள்ளி கூடத்திலேயே காலத்தை கழித்த எனது மனைவிக்கு சொல்லித் தந்தீர்களா....?

திருமணம் முடிந்து 25 ஆண்டுகள் ஓடிவிட்டன....இது வரையிலும் என்னால் அவளை  புரிந்து கொள்ள முடியவில்லை. அவளும் என்னை புரிந்து கொள்ளவில்லை..காலங்கள் ஓடிவிட்டன..வயது முதிர்ந்து விட்டது வாழ்வின் விளிம்பில் நிற்கின்றோம்.

மரண பயம் அதிகரித்து விட்டது.  மரணித்த உடன் ....நான் படித்த இயற்பியல் உயிரியல், வேதியியல், குறித்து என்னிடம் கேட்பதை விட எனது குடும்ப வாழ்வு  குழந்தை வளர்ப்பு குறித்தல்லவா அதிகமாக கேள்விகள் கேட்கப்படும்..நான் என்ன செய்வேன்....?

என் இறைவனிடம் குற்றம் சுமத்துவேன்...! எனக்கு வாழ்வின் உண்மைகளை எனது இளமை பருவத்தில் கற்றுத்தராமல் இருந்தது இந்த சமூகத்தின் குற்றம்.  எனது தாய் தந்தையின் குற்றம்  சமூக பொறுப்பாளர்களின் குற்றம்.....!

உண்மையை உணர்ந்த ஒரு முஸ்லிம் கல்வியாளர் கடிதம் மூலம் வெளிப்படுத்திய  அவரின் உள்ளக் குமுறல்.


CMN சலீம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...