புதன், 28 அக்டோபர், 2015

ஒற்றைக்கண்ணுடன் பிறந்த குழந்தை உயிர்வாழ்வது கடினம் .


எகிப்து நாட்டில் நெற்றியில் மட்டும் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த ஆண் குழந்தை இன்னும் சிலநாட்களே உயிர்வாழும் என டாக்டர்கள் கைவிரித்து விட்டதால்  அதன்  பெற்றோர்  மிகுந்த  வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.


’சைக்ளோபியா’ எனப்படும் இவ்வகை குறைபாடு ஆயிரத்தில் நான்கு பிரசவங்களில், குறிப்பாக.., விலங்கினப் பிரசவங்களில் ஏற்படுவது உண்டு என கருதப்படும் நிலையில் எகிப்தில் உள்ள எல்சென்பெல்லாவெய்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் பிறந்த இந்தக் குழந்தை மூக்கு இல்லாமல், நெற்றியில்  மட்டும்  ஒற்றைக்கண்ணுடன்  பிறந்துள்ளது.

கருவுற்றிருந்த  காலத்தில் அந்தக் குழந்தையின் தாய் உட்கொண்ட மருந்துகள் மற்றும் கதிர்வீச்சின் பாதிப்பால், கருவில் இருந்த அந்தக் குழந்தைக்கு இந்த குறைபாடு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் கருதுகின்றனர்.

 மேலும், இன்னும் சிலநாட்கள் மட்டுமே இந்தக் குழந்தை உயிர்வாழும் என்றும் அவர்கள் கூறுவதால் அதன் பெற்றோர் மிகுந்த வேதனையிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...